அழகி போட்டியில் திடீரென கழண்டு விழுந்த பல்செட்; அழகி செய்த செயல்..!

மிஸ் கிராண்ட் தாய்லாந்து போட்டியில் ரேம்ப் வாக்கின் போது எதிர்பாராத ஒரு சங்கடமான நிகழ்வு காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தாய்லாந்தில் அண்மையில் இடம்பெற்ற மிஸ் கிராண்ட் தாய்லாந்து அழகிப் போட்டியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பதும் தானி மாகாணத்தை சேர்ந்த அழகி காமோல்வான் சனாகோ என்பவர் மேடையில் தன்னை அறிமுகப்படுத்தி கொள்ள ரேம்ப் வாக் வந்தபோது, அவரது செயற்கை பற்கள் திடீரென கழன்று விழுந்தன.
இந்த இக்கட்டான சூழலில் சற்றும் பதற்றமடையாத அவர், உடனடியாக திரும்பி அவற்றை சரிசெய்துவிட்டு, மீண்டும் புன்னகையுடன் தனது ரேம்ப் வாக் பயணத்தை தொடர்ந்தார். அவரது இந்த மன உறுதியையும், சமயோசித புத்தியையும் அங்கிருந்த பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர் .
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், “தவறுகளை கையாண்ட விதம் அற்புதம்” என பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் வெற்றி பெறுபவர், இந்தியாவில் நடைபெற உள்ள மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2026 போட்டியில் தாய்லாந்து சார்பில் பங்கேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
![]()