பலதும் பத்தும்

2025 இல் இலங்கையில் அதிக மாசுபட்ட நகரம் காலி ; தூய்மையான நகரம் நுவரெலியா!

உலக நாடுகளின் காற்றின் தரத்தை மதிப்பிட்டு சுவிற்ஸர்லாந்தில் உள்ள ஐ.க்யூ ஏர் நிறுவனம் வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 42வது இடத்தில் உள்ளது.
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பாகிஸ்தான், உலகிலேயே காற்றின் தரம் மிகக் குறைந்த மாசுபட்ட நாடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் பட்டியலில் பங்களாதேஷ் இரண்டாம் இடத்திலும் தஜிகிஸ்தான் மூன்றாம் இடத்திலும், அண்டை நாடான இந்தியா 6ஆவது இடத்திலும் உள்ளது.
கடந்த ஆண்டு (2025) கணக்கெடுப்பின்படி, மாசுபட்ட நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் 42வது இடத்தைப் பிடித்த இலங்கையில், அதிகமாக மாசுபட்ட நகரம் காலி எனவும் சுத்தமான நகரம் நுவரெலியா எனவும் ஐ.க்யூ ஏர் நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *