பலதும் பத்தும்

தங்கத்தின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம் ; பாபா வாங்கா கணிப்பு கூறுவது என்ன?

இந்தாண்டு தொடக்கத்தில் தங்கம் விலை உச்சத்தில் இருந்தது. இதனால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும், தங்கம் விலை தற்போது சற்று சரிந்து வருகிறது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. மத்திய கிழக்கில் போர் சூழல் நிலவுவதால் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உச்சத்திற்கு செல்லும் என்று நினைத்த நிலையில், தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.

இதற்கிடையே, தற்போது தங்கம் வாங்கலாமா அல்லது இன்னும் விலை குறையும் வரை காத்திருக்கலாமா என்ற குழப்பம் நிலவுகிறது.

பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர் பாபா வாங்கா. உலகப் புகழ் பெற்ற தீர்க்கதரிசியாகக் கருதப்படும் இவர் “பால்கன் நாடுகளின் நோஸ்ட்ராடாமஸ்” என்று அழைக்கப்படுகிறார். பார்வை மாற்றுத்திறனாளியான பாபா வாங்கா, 5079 ஆம் ஆண்டு வரையிலான நிகழ்வுகளைக் கணித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இணையதள அறிக்கைகளின்படி, 2026 ஆம் ஆண்டில் ஒரு பெரிய உலகளாவிய நிதி நெருக்கடி ஏற்படும் என்று பாபா வாங்கா எச்சரித்திருந்தார். இந்த நெருக்கடி வங்கிகளின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று அஞ்சப்படுகிறது.

வங்கிகள் மற்றும் காகித நாணயங்கள் மீதான நம்பிக்கை இழக்கப்படும்போது, தங்கத்தின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. நிபுணர்கள் தங்கத்தின் விலை வதந்திகளை மட்டும் சார்ந்தது அல்ல.

உலகளாவிய வட்டி விகிதங்கள், பணவீக்கம் மற்றும் அரசியல் ஆகியவற்றையும் சார்ந்துள்ளது. நிதி ஆய்வாளர்களின் கூற்றுப்படி, போர்ச் சூழல் தணிந்தவுடன் தங்கத்தின் விலை மீண்டும் வீழ்ச்சியடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இதை யாராலும் மறுக்க முடியாது. தங்கம் எப்போதுமே ஒரு பாதுகாப்பான முதலீடாக இருந்து வருகிறது.

எனவே, உங்கள் நிதித் திட்டமிடலுக்கு ஏற்ப செயல்படுவது அவசியம் என்கின்றனர். 2026-ல் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்குமா அல்லது எதிர்காலத்தில் குறையுமா? என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *