பலதும் பத்தும்

இந்திய அரசியல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த மோடி

இந்திய அரசியல் வரலாற்றில் மோடி புதிய சாதனை படைத்துள்ளார். 2014 இந்திய நாடாளுமன்ற தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

அப்போது முதல் இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவி வகித்து வருகிறார். அதற்கு முன்னதாக 2001 ஆம் ஆண்டு முதல் 2014 வரை குஜராத் முதல்வராக பதவி வகித்து வந்தார்.

இதன் மூலம், இந்தியாவில் ஒரு அரசாங்கத்தின் மிக நீண்ட காலம் பதவி வகித்த தலைவர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.

முன்னதாக முன்னாள் சிக்கிம் முதல்வர் பவன் குமார் சாம்லிங் 8,930 நாள் அரசாங்கத்தின் மிக நீண்ட காலம் பதவி வகித்த தலைவராக இருந்தார்.

முதல்வராக 12 ஆண்டுகள், பிரதமராக 11 ஆண்டுகள் என 8,931 நாட்கள் அரசாங்கத்தின் தலைவராக இருந்த பவன் குமார் சாம்லிங்கின் சாதனையை முறியடித்துள்ளார்.

அமித்ஷா வாழ்த்து

மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, “ஏழைகளுக்கு அவர்களின் உரிமைகளை வழங்குவது, வளர்ச்சியில் புதிய மைல்கற்களை அமைப்பது, உலகளாவிய தளங்களில் இந்தியாவின் பெருமையை உயர்த்துவது என, மோடி சகாப்தம் இந்தியாவை அடையாளம் காண முடியாத அளவிற்கு மாற்றியுள்ளது.

இந்த புதிய இந்தியாவை வளர்ப்பதற்கு ஒரு வாழ்நாள் முயற்சி தேவைப்பட்டது, பிரதமர் அதை வழங்கினார். 24 ஆண்டுகளுக்கும் மேலாக விடுமுறை எடுக்காமல் நாட்டிற்காகவும் அதன் மக்களுக்கும் சேவை செய்வது, அவருடைய அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் வெளிப்பாடாகும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *