பலதும் பத்தும்

கற்பிட்டி கடற்கரையில் திருமண பந்தத்தில் இணைந்த வெளிநாட்டு ஜோடி

புத்தளம், கற்பிட்டி கடற்கரையில் வெளிநாட்டு தம்பதியின் திருமணம் நடைபெற்றது. ஹங்கேரியை சேர்ந்த ஜோனஸ் கோவாஸ் மற்றும் சில்வி தோத் ஆகியோர் இயற்கை அழகு மற்றும் கலாசாரத்தின் மீது கொண்ட அதிக ஈடுபாடு கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக, அவர்கள் இலங்கையின் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்யத் தீர்மானித்ததாக தெரிவித்துள்ளனர்.

ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டி ஆகியோரின் ஏற்பாட்டில், கலாசார விழுமியங்களுக்கு முன்னுரிமை அளித்து இந்த திருமண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விசேட திருமண நிகழ்வை அங்கிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு இரசித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button