பலதும் பத்தும்

சந்தையில் 28 கோடி ரூபாவுக்கு ஏலம் போன மீன்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் டோயோசு மீன் சந்தையில் ஓமா கடற்பகுதியில் பிடிக்கப்பட்ட புளுபின் டுனா மீன் அங்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த மீன் அதன் தனித்துவமான சுவைக்கு பெயர்போனது. இதனை வாங்குவதற்கு எப்போதும் கடுமையான போட்டி நிலவும்.

அதன்படி புத்தாண்டை முன்னிட்டு இந்த சந்தையில் ஏலம் நடைபெற்றது. அப்போது 243 கிலோ எடை கொண்ட டுனா மீனை ஏலம் விட்டதும் போட்டிபோட்டு மக்கள் வாங்க முயன்றனர். இதன்முடிவில் அந்த மீன் சுமார் (இந்திய மதிப்பில்) 28 கோடி ரூபாவுக்கு விற்பனையானது.

இதனை சுஷி ஜான்மாய் என்ற உணவகத்தின் உரிமையாளரான கியோஷி கிமுரா வாங்கினார். இதன்மூலம் கடந்த புத்தாண்டின் சாதனையான (இந்திய மதிப்பில்) 11 கோடி ரூபா இந்த முறை முறியடிக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button