கவிதைகள்
அடைமழைப்பொழுதில்…. கவிதை… முல்லைஅமுதன்

நிஜங்கள்.
இன்றைய நாளின்
அடைமழைப்பொழுதில்
குடைக்குள் கூடவர அனுமதித்தேன்..
கை வலிக்குதா? தாருங்கள்..
குடை கூட வந்த யாரோ அவளின் கைக்கு மாறியது.
காத தூரமே…நடந்திருப்போம்.
திருப்பத்தில்
குடையுடன் வேகமாக நடந்தாள்..
தனியே மழைக்குள் நான்..
முல்லைஅமுதன்
22/12/2025
![]()