பலதும் பத்தும்

ஜனாதிபதிக்கு ஓவியம் வழங்கிய சிறுமி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு சிறுமி ஒருவர் தான் வரைந்த ஓவியத்தை வழங்கி வைத்துள்ளார். மன்னார் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் உட்கட்டமைப்பு வசதிகளை மீளக் கட்டியெழுப்பவும் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக மீளாய்வு செய்வதற்கு நேற்று முன்தினம் ஜனாதிபதி மன்னாருக்கு விஜயம் செய்திருந்தார்.

இது தொடர்பாக மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பின்னர் தனது ஓவியத்தை ஜனாதிபதியிடம் மேற்படி சிறுமி வழங்கி வைத்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button