சச்சின் – மெஸ்ஸி சந்திப்பு

இந்தியா விஜயம் மேற்கொண்ட ஆர்ஜன்டீன நட்சத்திர கால்பந்து வீரர் லியொனல் மெஸ்ஸி, இந்திய முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை நேற்று முன்தினம் சந்தித்தார். மும்பை, வான்கடே அரங்கில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று திரண்ட நிகழ்வின்போதே இருவரும் சந்தித்துக் கொண்டனர்.
மெஸ்ஸியுடன் லூயிஸ் சுவாரஸ் மற்றும் ரோட்ரிகோ டி போல் ஆகியோரும் நான்கு நாள் விஜயமாகவே இந்திய சென்றுள்ளார். அவர் ஹைதராபாத்தில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மும்பை வந்தார்.
வான்கடே மைதானத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் சச்சின் டெண்டுல்கர், மெஸ்ஸியை மேடையில் வரவேற்றார்.
மெஸ்ஸி குறித்துப் பேசிய சச்சின், ‘மும்பை கனவுகளின் நகரம். பல கனவுகள் இந்த மைதானத்தில் நிறைவேறியுள்ளன. 2011இல் நாங்கள் உலகக் கிண்ணத்தை வென்றது போன்று, இன்று மெஸ்ஸி இங்கு வந்திருப்பது மும்பைக்கு ஒரு பொற்காலம். அவர் எல்லாவற்றையும் சாதித்துவிட்டார். அவரது அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அவரது பணிவு எங்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது’ என்றார்.
இதன்போது டெண்டுல்கர் தான் கையொப்பம் இட்ட 10 ஆம் இலக்க ஜெர்சியை மெஸ்ஸிக்கு வழங்கினார்.
![]()