கவிதைகள்
தேநீரின் சுவை… கவிதை.. முல்லைஅமுதன்

இப்போதெல்லாம்
ஒரு தேநீருக்காக
காத்திருக்கவேண்டியிருக்கிறது.
பூஞ்செடிகளை
அங்கும் இங்குமாக
மாற்றிவைப்பதிலேயே
நேரம் போய்விடுகிறது.
அருகிருந்து முன்பு போல
கதைகள் பேசாது அலைபேசிக்குள்
அடங்கிப்போகையில்
தாமதமாய் தந்திருந்த தேநீரின் சுவை கூட
நேற்றைப்போலில்லை.
பொழுதெல்லாம்.
தேநீருக்கான காத்திருப்பும்,
என் உடல் கழுவி,உடை மாற்றி…
படுக்கையில்
கிடத்தும் வரை..
காதல் இல்லை என்றாகிவிமா..தோழியே..
![]()