கவிதைகள்

வாய்தான் கசக்கிறது வஞ்சியல்ல!… கவிதை… சங்கர சுப்பிரமணியன்

அன்பாய் என்னோடு இருந்தவள்தான்
இன்று காதலி கசந்து போனது ஏனோ
அவள் கசப்பாய் மாறிய காரணமென்ன

நானும் அவளை தவறாய் எண்ணுவதேன்
ஒருபோதும் கசப்பாய் மாறவே மாட்டாள்
கசப்பாக காரணம் அறிந்திட முயன்றேன்

விடாது முயன்றேன் வெற்றியும் பெற்றேன்
வேதனயின் காரணம் வேறோடு சாய்ந்தது
வேறொன்றுமில்லை வீண்செயலே அதுவும்

விலாவில் வலியால் வேதனயால் துடித்தாள்
வேப்பெண்ணை கொண்டு விரலால் தடவிட
வேதன மறைந்திட வீண்பழியைச் சுமந்தாள்

கசந்தது அவளல்ல விரல்கள் மட்டுமே
தடவிய விரலால்களால் எப்படி கசந்தாள்
ஏதிலார் குற்றம் பார்ப்பவனாய் ஆனேன்

தன்குற்றம் காண்கவும் தீதனை அறிந்தேன்
தடவிய விரலும் மறந்து வாயில் பட்டதால்
வாய் கசந்தது வஞ்சியவள் கசக்கவில்லை!

சங்கர சுப்பிரமணியன்

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *