கவிதைகள்

ஆரம்பமும் முடிவும்!… கவிதை… சங்கர சுப்பிரமணியன்

என்பது வயதில் ஒருவர் ஆலயத்திலிருக்க
இருபது வயது இளைஞன் அங்கு வந்தான்
ஐயா ஒன்று கேட்கலாமா என்று கேட்டான்
கேள் தெரிந்தால் சொல்கிறேன் என்றார்

இவ்வயதில் என்ன உணர்கிறீர்கள் என்றான்
இருபதை உணர்கிறேன் என்றார் முதியவர்
ஒன்றும் புரியவில்லை என்றான் இளைஞன்
புரியும்படி சொல்கிறேன் கேளென்றார் அவர்

ஒருவரின் ஆயுள் நூறெனக் கொண்டால்
இருபதில் இருப்பவன் ஆரம்பத்திலிருக்க
என்பதில் இருப்பவன் முடிவில் நிற்கிறான்
இதைத்தான் இருபது என்றேன் என்றார்

இருபதிலிருப்பவன் என்பதை எதிர்நோக்க
என்பதைக் கண்டவனும் எதிர்நோக்குகிறான்
ஒருவன் ஆரம்பதலிருந்து எதிர்நோக்கி நிற்க
மற்றவன் முடிவை நோக்கி காத்து நிற்கிறான்

நீ இருபதில் நிற்க நான் இருபதுக்காக நிற்க
நானும் நீயும் காத்து நிற்பது உண்மையல்லவா
நீ ஆரம்பத்தில் வாழ்வதற்கு காத்து நிற்கிறாய்
நான் வாழ்வின் முடிவில் நிற்கிறேன் என்றார்!

சங்கர சுப்பிரமணியன்

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *