முச்சந்தி

அனைத்தையும் கொண்ட ஒரு நாடே இலங்கை; மனம் நெகிழ்ந்த நடிகர் சரத்குமார்!

இலங்கை அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு நாடாகும். இங்கு எல்லாமே காணப்படுகின்றது என்று தென்னிந்திய பிரபல நடிகர் சரத்குமார் மனம் நெகிழ்ந்து தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரைப்படத்துறையின் பிரபல நடிகர் சரத்குமார் நேற்றுமுன்தினம் நாட்டை வந்தடைந்தார்.

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு 4 நாள் பயணமாக இலங்கையை வந்தடைந்தார்.

இந்த நிலையில் நேற்று கண்டிக்கு விஜயம் செய்தபோது ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன் அந்தப் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய 07 நட்சத்திர ஹோட்டலைப் பார்வையிடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

ஹோட்டல் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் சரத்குமார், இது 7 நட்சத்திர வசதிகளுடன் கூடிய உலகெங்கிலும் உள்ள ஹோட்டல்களைப் போன்ற ஒரு ஹோட்டலாக பிரதிபலிக்கின்றது. “இது மே அல்லது ஜூன் மாதங்களில் திறக்கப்படும். நான் அதைப் பார்க்க வந்தேன். சுகாதாரம் தொடர்பான எதுவும் இங்கே உள்ளது. கொழும்பிலிருந்து ஹெலிகாப்டர் சேவைகள் கிடைக்கின்றன.

இலங்கை அனைத்தையும் கொண்ட ஒரு நாடு. “இங்கே எல்லாம் கிடைக்கிறது. பனியைத் தவிர. இலங்கையில் மற்ற எல்லா காலநிலையும் கிடைக்கிறது,” என்று மனம் நெகிழ்ந்து இலங்கையைப் பாராட்டியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *