இலங்கை

பாராளுமன்றத்துக்கு வந்து பதிலளிக்கத் தயார்; மத்திய வங்கியின் ஆளுநர்

பொருளாதாரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், மத்திய வங்கியின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு வருகை தந்து பதிலளிக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு மத்திய வங்கி அதிகாரிகள் அழைக்கப்பட்ட போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் நிதி கொள்கை குறித்து, பணவீக்கம் அல்லது அந்நிய செலாவணி விகிதங்கள் குறித்து கேள்வி எழுப்பினால்,பொதுவாகப் பதில் கிடைப்பதில்லை, ஏன் என்றால் பாராளுமன்றத்தில் மத்திய வங்கியின் பிரதிநிதித்துவம் இல்லையென அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர், கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த நந்தலால் வீரசிங்க ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒரு கேள்வியை எழுப்பினால், அது நேரடியாக நிதி அமைச்சருக்கே அனுப்பப்படுகிறது என்றும். பின்னர் அவர்கள் சில சமயங்களில் எங்களுடன் தொடர்பு கொள்வார்கள்.

குறித்த கேள்விக்கான பதில் நாளை(நேற்று)தேவை என்றால், அது இன்று(செவ்வாய்)எங்களுக்குக் கிடைக்கும் ” எனத் தெரிவித்தார்.

இதன்பின்னர் அந்தக் கேள்விகளுக்குப் பதில்களை வழங்க நடவடிக்கை எடுத்த பிறகு, அது நிதி அமைச்சரிடம் அனுப்பப்படும் என்றும் அதுவே செயன்முறை என்றும் அவர் கூறியுள்ளார்.

நிதி அமைச்சர் கேள்விகளுக்கான பதில்களை அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் பெற்று, அறிக்கையைத் தயாரித்து தொடர்புடைய அமைச்சருக்கு வழங்குவார் என்றும் அழைப்பு விடுக்கும் பட்சத்தில் பாராளுமன்றத்திற்கு வருகை தந்து பதிலளிக்க முடியும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button