முச்சந்தி
வடக்கில் போதைவஸ்துக்கு ராணுவமே காரணம்: தெற்கில் போதைவஸ்தை ஒழிக்க அனுர சூளுரை!!… நவீனன்

(விடுதலைப்புலிகள் வடக்கு கிழக்கை நிர்வாகம் செய்த காலங்களில் அங்கு போதைப்பொருள் பாவனை என்பது முற்றாக தடை செய்யப்பட்டிருந்தது. போர் முடிந்த பின்னர் போதைப்பொருள் விநியோகம் என்பது முழு மூச்சாக தற்போது நடைபெறுகிறது.
யுத்தம் முடிந்த பின்னரே வடக்கில் ஆவா குழு உருவாக்கப்பட்டது. கிரீஸ் மனிதர்கள் என்றும் உருவாக்கப்பட்டது. பல வாள்வெட்டு குழுக்கள் உருவாக்கப்பட்டன. யாழ்ப்பாண மக்கள் மத்தில் அவர்களின் கலாசாரத்தை, பண்பாட்டை உடைத்து சிதைப்பதற்கேற்ற வகையில் இந்த விடயங்கள் இராணுவ புலனாய்வு அமைப்புகளால் தொடர்ந்து உருவாக்கப்பட்டன. வடக்கில் மட்டுமல்ல கிழக்கிலும் போதைப்பொருள் விநியோகம் அதிகரித்தது. கசிப்பு உற்பத்தியும் அதிகரித்தது)
என்ன முரண்? ஒரு தீவுக்குள்ளே எத்தனை பெரிய முரண்பாடுகள். இனவாதம் அற்ற ஆட்சி என்று கூறினாலும், இன்னும் பிளவுகளையும் பிணக்குகளையும் தாண்டி வரமால் இருக்கிறது இந்த அரசும். கண் துடைப்புக்காக தெற்கை வளர்க்கும் சிங்கள அரசு, தமிழர் தாயகத்தில் போதையின் பாதைக்கு வழி கொடுப்பது அரச இராணுவம் என்று நாடாளமன்ற உறுப்பினரின் கூற்று பெரும் உண்மையை விளக்குகிறது.
போதைவஸ்தை ஒழிக்க, அதனுடன் மோத சிறிலங்கா அரசு தயார் என ஜனாதிபதி அனுர குமார சூளுரைத்துள்ளார். ‘We Are Ready To Fight Against Drugs’ என்ற தலைப்பில் நாடாளாவிய ரீதியில் போராடுவதாக அவர் கூறியுள்ளார்.விடுதலைப்புலிகள் வடக்கு கிழக்கில் நிர்வாகம் செய்த காலங்களில் அங்கு போதைப்பொருள் பாவனை என்பது முற்றாக இல்லை என்றே கூறலாம், அத்துடன் முழுமையாக தடை செய்யப்பட்டிருந்தது. போர் முடிந்த பின்னர் போதைப்பொருள் விநியோகம் என்பது முழு மூச்சாக நடைபெறுகிறது. வடக்கில் போதைப்பொருள் பாவனைக்கு இராணுவத்தினரே முழு பொறுப்பு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாகாணங்களில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் பிரச்சினை ஏற்பட்டால் இராணுவ முகாம்களில் சென்று ஒழிவதாகவும் அவர் குற்றஞ் சுமத்தியுள்ளார். இதேவேளை, நாடளாவிய ரீதியில் மக்கள் தொகையை விடவும் மதுபான சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் நாட்டின் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும், நாட்டில் உள்ள காவல்துறையினர் சீராக இருந்தால் போதைப்பொருளினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவீகரன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் அதிகரிக்கும் போதைவஸ்து:
வடக்கில் அதிகரித்து வரும் போதைப்பொருள் விநியோகம், பாவனைகளில் இராணுவத்தினர், பொலிஸாருக்கு நேரடித்தொடர்புகள் உண்டு. அவர்கள் தான் போதைப் பொருளுக்கு முழுக் காரணம் என்பதனை புரிந்துகொள்ளாமல் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாதென தமிழ்த் தேசியக் கட்சிகளின் எம்.பிக்கள் அரசுக்கு சுட்டிக்காட்டி உள்ளனர்.
தமிழ் இளைஞர்களிடையே போதைப் பொருள் பாவனை சட்டத்திற்கு முரணான செயற்பாடுகள், வன்முறைகள் சமுகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் பெண்கள், பிள்ளைகள், பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். யாழ்ப்பாணத்தில் இந்த நிலைமை மேலும் அதிகரித்துள்ளது. போதைப் பொருள் புனர்வாழ்வு நிலையங்கள் இல்லாமை இதற்கு பெரும் காரணியாக இருக்கின்றது. இந்த விடயங்கள் தொடர்பில் அரசு உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டும். இதனால் புனர்வாழ்வளித்தல், சிறுவர்கள், பெண்களை பாதுகாத்தல் என்பனவும் அவசியமாகும்.
வட கிழக்கு இராணுவ பிரசன்னம்:
வடக்கு, கிழக்கை எடுத்துக்கொண்டால் இராணுவத்தின் 20 பிரிவுகளில் 16 பிரிவுகள் இந்த
மாகாணங்களில் உள்ளன. குறிப்பாக வடக்கில் மாத்திரம் 14 பிரிவுகள் உள்ளன. கரையோரம் முழுவதும் ஒரு கிலோ மீற்றர் இடைவெளியில் பொதுமக்களின் காணிகளை பிடித்து கடற்படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாகாணங்களில் உள்ளன. குறிப்பாக வடக்கில் மாத்திரம் 14 பிரிவுகள் உள்ளன. கரையோரம் முழுவதும் ஒரு கிலோ மீற்றர் இடைவெளியில் பொதுமக்களின் காணிகளை பிடித்து கடற்படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு பொதுமக்களுக்கு ஒரு இராணுவ சிப்பாய் என்ற ரீதியில் படையினர் இருப்பதுடன் யாழ்ப்பாணத்தில் 14 பொதுமக்களுக்கு ஒரு இராணுவ சிப்பாய் என்ற வகையிலும் வன்னியில் 10 பொதுமக்களுக்கு ஒரு இராணுவ சிப்பாய் என்ற ரீதியிலும் படையினர் இருக்கின்றனர். போரை வென்றெடுத்தவர்கள் என்றும் தமது புலனாய்வு பலமாக இருக்கின்றது என்றெல்லாம் அரச தரப்பு கூறுகின்றனர்.
அத்துடன் ஆவா குழுவினர் பொலிஸாரால் வழிநடத்தப்படுகின்றனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமே. இன்று போதைப் பொருளுடன் தொடர்புடையவர்கள் இப்போது ஓடி ஒளிவது இராணுவ முகாம்கள் மற்றும் கடற்படை முகாம்களுக்குள்ளேயே ஆகும். இந்த யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் அதே இராணுவம், அதே முப்படையினரை வைத்துக்கொண்டு இந்த பிரச்சினையை தீர்க்க முடியுமென்று கனவு காண்பது போலியாகும்.
பிரச்சினை எங்கே இருக்கின்றது என்று சரியாக விளங்கிக் கொள்ளுங்கள். இந்த இராணுவம் இப்போதும் தமிழர்களை எதிரிகளாகவே பார்க்கின்றனர் என்பதே உண்மை. இவர்களின் மனோநிலையை மாற்றாமல் ஒருபோதும் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது.
நாட்டின் அதியுயர்பீடமாகக் காணப்படும் பாராளுமன்றிலே, தற்போது நாட்டில் போதைப் பொருட்களால் சீரழிந்து கொண்டிருக்கும் இளைஞர்கள், யுவதிகள், பொதுமக்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள், இந்த போதைப்பொருள் ஊடுருவல்கள் பாடசாலைகளில் கூட இடம்பெற்று வருவதை தற்போது நாம் அவதானித்து வருகின்றோம்.
போதைப்பொருள் பாவனையால் எமது சந்ததிகள், ஒருதொகுதி எதிர்கால தலைமுறையினர் அழிந்து வருகின்றனர். இந்தப் போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துகின்ற விடயத்தில் பொலிஸாருக்கு முக்கிய பொறுப்பு இருக்கின்றது. சட்டம் ஒழுங்கு முறையாகச் செயற்படுத்துங்கள். இந்த விடயத்தில் கூடிய கரிசனை செலுத்தி போதைப் பொருட்களிடமிருந்து எமது மக்களைக் காப்பாற்றுங்கள். அதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுங்கள் நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆவேசமாக கூறியுள்ளார்.போரின் பின் வடகிழக்கில் போதை:
யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கில் போதைப்பொருள் பாவனை, அதன் விநியோகம் மற்றும் வியாபாரம் என்பன பரந்துபட்டு காணப்படுகின்றன. விடுதலைப்புலிகள் வடக்கு கிழக்கை நிர்வாகம் செய்த காலங்களில் அங்கு போதைப்பொருள் பாவனை என்பது முற்றாக தடை செய்யப்பட்டிருந்தது. போர் முடிந்த பின்னர் போதைப்பொருள் விநியோகம் என்பது முழு மூச்சாக தற்போது நடைபெறுகிறது.
யுத்தம் முடிந்த பின்னரே வடக்கில் ஆவா குழு உருவாக்கப்பட்டுள்ளது.கிரீஸ் மனிதர்கள் என்றும் உருவாக்கப்பட்டார்கள். வாள்வெட்டு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மக்கள் மத்தில் அவர்களின் கலாசாரத்தை, பண்பாட்டை உடைத்து சிதைப்பதற்கேற்ற வகையில் இந்த விடயங்கள் இராணுவ புலனாய்வு அமைப்புகளால் உருவாக்கப்பட்டுள்ளன.
வடக்கில் மட்டுமல்ல கிழக்கிலும் போதைப்பொருள் விநியோகம் அதிகரித்துள்ளது. கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. மதுபான சாலைகள் அதிகரித்து வருகின்றன எனவே போதைப்பொருள் விநியோகம், பாவனையை தடுக்க வேண்டுமாக இருந்தால் நடவடிக்கைகளை இறுக்கமாக முன்னெடுக்க வேண்டும். இவ்வாறான தீய வேலைகளுக்கு உறுதுணையாக இருக்கின்ற இராணுவத்தினர்,பொலிஸார் கைது செய்யப்பட வேண்டும்.
கடற்படையின் கீழேயே கேரள கஞ்சா கொண்டு வரப்படுகிறது. வல்வெட்டித்துறையில் வாள்வெட்டுக் குழுவை சேர்ந்தவரை அமைச்சர் ஒருவர் தமது பிராந்திய இணைப்பாளராக தேசிய மக்கள் சக்திக்கு இணைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. அரசியல்வாதிகளுக்கும், போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.
அரசியல்வாதிகளும் போதைப் பொருள் தொடர்பும்:
போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்பு குறித்து
விசாரணை நடத்த வேண்டும். போதைப் பொருள் ஒழிப்புக்கு உரிய நடவடிக்கைகளை அரச நிறுவன மட்டத்தில் முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
விசாரணை நடத்த வேண்டும். போதைப் பொருள் ஒழிப்புக்கு உரிய நடவடிக்கைகளை அரச நிறுவன மட்டத்தில் முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.2025 .01.01 முதல் 2025.03.01 வரையான காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் 168 ஹெரோயின் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு, 279 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
2140 கிலோ கேரள கஞ்சா, 423 கிராம் ஐஸ் போதைப்பொருள், 41048 போதைப்பொருள் குளிசைகள் கைப்பற்றப்பட்டன. அதேபோல் யாழ்ப்பாணத்தில் 104 கிராம் ஐஸ், 650 கிலோ கேரள கஞ்சா, 26915 போதைப்பொருள் குளிசைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் ஆணைக்கு அமைவாக போதைப்பொருள் பாவனையை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டும் என்றார்.
வடக்கில் உள்ள போதைப்பொருள் பாவனைக்கு முழு பொறுப்பும் இராணுவத்தினரையே சாரும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உறுதியாக தெரிவித்துள்ளார்.
போதைவஸ்தை ஒழிக்க அனுர தயார்:
தெற்கில் அனுர அரசாங்கம் போதைப்பொருளுக்கு எதிராக மோதுவதற்கு தயார் என தெரிவித்து உள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சிறைத்தண்டனை விதிக்கப்படுவோரில் 64 வீதமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் கூறியுள்ளார்.
விஷமான போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக அரசாங்கத்தின் புதிய திட்டமான முழு நாடுமே ஒன்றாக தேசிய அளவில் செயற்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மோதுவதற்கு நங்கள் தயார்:
ஜனாதிபதி அனுர குமார, We Are Ready To Fight Against Drugs என்ற தலைப்பில் நாடாளாவ ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே போதைப் பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க ஒரு வலுவான மக்கள் இயக்கம் உருவாக்கப்படும் என்றும், போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் தங்கள் சட்டவிரோத நடைமுறைகளை நிறுத்த அழைப்பு விடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று வலியுறுத்தி உள்ளார்.
போதைக்கு எதிராக முழு நாடுமே :
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க ஒரு வலுவான மக்கள் இயக்கம் உருவாக்கப்படும் என்றும், போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் தங்கள் சட்டவிரோத நடைமுறைகளை நிறுத்த அழைப்பு விடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கமும் பொலிஸ் திணைக்களமும் தனியாக போதைப்பொருளை தடுக்கும் செயற்பாட்டை முன்னெடுக்க முடியாது. அழிவுகரமான அச்சுறுத்தலை ஒழிப்பதில் அனைவரும் ஒன்றுபட வேண்டும். போதைப்பொருளுக்கு உதவும் பொலிஸார் விலகிக்கொள்ள வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவர்களை நாங்கள் விலக்குவோம்.போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக பொலிஸ், இராணுவம், சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் புலனாய்வு சேவைகளை உள்ளடக்கிய ஒரு தேசிய செயற்பாட்டு மையம் நிறுவப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
![]()