இலங்கை

இந்திய இராணுவ இரகசியங்களை திருடிய இலங்கைத் தம்பதி கைது;  ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு?

தமிழகத்தில் இராணுவ இரகசியங்களைத் திருடுவதற்குத் தீவிரவாதிகளுக்கு உதவியாக இருந்த இலங்கை மற்றும் மலேசியாவைச் சேர்ந்தவர்கள் மீதான வழக்கு நவம்பர் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக ஊடகமொன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

இராமநாதபுரம், உச்சிப்புளி பகுதியில் மலேசியக் குடியுரிமை பெற்ற ஒருவர் நடத்திய, விருந்தகத்தில் பணியாற்றிய இலங்கையைச்(கொழும்பு) சேர்ந்த தம்பதியினர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவர்கள் 2015 முதல் 2021 ஆம் ஆண்டு வரை, அங்கு சட்டவிரோதமாக தங்கியிருந்த நிலையில், ஆதார் அட்டை மற்றும் சிம் அட்டைகளை பெற்றுள்ளனர்.

அத்துடன், அந்த ஆவணங்களை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய பாகிஸ்தானியர் ஒருவரிடம் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து அவர், அதனைப் பயன்படுத்தி இராணுவ இரகசியங்களைத் திருடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்த தகவல் அறிந்த பொலிஸார் 2021ஆம் ஆண்டு இலங்கை தம்பதி, விருந்தக உரிமையாளர் மற்றும் பாகிஸ்தானியரை கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

எனினும், இராணுவ இரகசிங்களை திருடிய பாகிஸ்தானியர் தலைமறைவாகியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *