கவிதைகள்
மனம் உழல்கின்றேன்!…. கவிதை… சங்கர சுப்பிரமணியன்

தாய்நாடென்றே உரைத்தனர்
பெண்மையை போற்றுவதாக
புலகாங்கிதம் அடைந்தேன்
கங்கை ஆறென போற்றினர்
எங்குளது இத்தகு மேன்மையென
இறுமாப்பு கொண்டேன்
பெண்ணிற் பெருந்தக்க யாவுள
என்பதற்கு பொருள் கேட்டு
புண்ணுறு வலியடைந்தேன்
தக்கார் தகவிலர் என்றுரைக்க
மிக்கார் யாருளர் என்றே
தக்கவரைச் சொல் என்றேன்
துகிலுரியும் கதையும் கேட்டு
தோகையை நோகவைத்து
தகுதியென மெச்சக் கேட்டேன்
குறை ஒன்றும் இல்லையென்று
முறை தவறி அணிசெய்த
மறை கேட்டு மயங்குகின்றேன்
மயங்குகிறாள் ஒரு மாது – தன்
மனதுக்கும் செயலுக்கும் உறவுமிலாது
எனக்கேட்டு மனம் உழலுகின்றேன்

![]()