கவிதைகள்
அப்பன் முருகன் அருளுவான் எமக்கு! … கந்தசஷ்டிச் சிந்தனை – 6 ம் நாள்…. ஜெயராமசர்மா

ஒருமுகம் எங்களை உருகிட வைக்கும்
மறுமுகம் எங்களை மயங்கிடச் செய்யும்
அறுமுகம் இணைந்து ஆனந்தம் கொடுக்கும்
அப்பன் முருகன் அருளுவான் எமக்கு
வேலன் என்றால் வினைகள் ஓடும்
காலனும் அருகே வந்திட மாட்டான்
ஆலமாய் இருக்கும் அனைத்தையும் போக்குவான்
அழகன் முருகன் அடியினைப் பரவுவோம்
கனியும் அவனே சுவையும் அவனே
காயும் அவனே மலரும் அவனே
அனைத்தும் ஆகி இருப்பவன் முருகன்
அவனை நினைத்தால் ஆனந்தம் பெருகும் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()