பலதும் பத்தும்

மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு

மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம் தனது விண்டோஸ் 10 (Windows 10) இயக்க முறைமைக்கான பாதுகாப்பு புதுப்பிப்புகளை நாளை (14) முதல் முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளது.

எனவே, விண்டோஸ் 10 (Windows 10) கணினிகளின் பாதுகாப்பு நாளை முதல் ஆபத்தில் சிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 11 (Windows 11) கணினிகளை இலவசமாகப் புதுப்பிக்கும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது.

இதற்கிடையில், உலகில் 1.4 பில்லியனுக்கும் அதிகமான சாதனங்கள் விண்டோஸைப் (Windows) பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் 43% பேர் ஏற்கனவே விண்டோஸ் 10 (Windows 10) ஐப் பயன்படுத்துகிறார்கள்.

இதேவேளை நீங்கள் 2026 ஆம் ஆண்டுவரை விண்டோஸ் 10 ஐ தொடர்ந்து பயன்படுத்த விரும்பினால் பாதுகாப்பு புதுப்பிப்புகளை வழங்கும் ஒரு வருட ESU நிரலுக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button