இலங்கை

படையினரை வேட்டையாட யாருக்கும் உரிமை; அமெரிக்காவில் இலங்கையர்கள் முன் ஜனாதிபதி அநுர

மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்தார்கள். இன்று நாங்கள் அதைச் செய்து வருகிறோம். அதேபோல், சர்வதேச அளவில் எங்கள் நாடு குறித்த கறைபடிந்த பிம்பத்தை உருவாக்கிய கொலைகள் மற்றும் கடத்தல்கள் குறித்து நீதி தேவை. அதற்கு நியாயம் தேவை. அதனைப் பற்றி நாங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம் . படையினரை வேட்டையாடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. போரின்போது அவர்கள் செய்த பணி குறித்து எங்களுக்கு பாராட்டு உள்ளது. ஆனால் அதற்கு மறைமுகமாக செய்த குற்றங்கள் குறித்து நாங்கள் விசாரணை நடத்துகிறோம்.என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரத் தூதரகம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழில்வல்லுநர்கள் உட்பட அமெரிக்காவில் வசிக்கும் பெருந்தொகையானவர்கள் பங்கேற்றிருந்தனர்

அங்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தத்துறையில் மேலும் கூறியதாவது

கடந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து புதிய அரசாங்கத்தை அமைக்க நீங்கள் ஏன் முடிவு செய்தீர்கள்? அந்த முடிவு ஒரு சாதாரண முடிவு அல்ல.அந்த வெற்றியை அடைந்து வருடம் கடந்துவிட்டது. இந்த அரசாங்கம் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது? அந்த நோக்கத்துக்கு ஏற்றவாறு முடிவுகள் எட்டப்பட்டதா? இல்லையா? அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு குறித்து மீளாய்வு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்

இலங்கையில் மீண்டும் ஒருபோதும் நடக்காத வகையில் ஸ்திரத்தன்மையை உருவாக்குவதே எங்களுக்கு பிரதான சவாலாக இருந்தது. ஒரு வருடத்தில், நமது நாடு இழந்த பொருளாதார நெருக்கடியில் கணிசமான அளவை சீரமைத்து, ஸ்திரத்தன்மையை உருவாக்க முடிந்துள்ளது. இன்று, பொருளாதார நெருக்கடியை மிக வேகமாகத் தணித்த நாடாக இலங்கை அறிமுகப்படுத்தப்படத் தொடங்கியுள்ளது. இது சர்வதேச நிதி நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதாரம் எட்டியுள்ள நன்மைகள் சாதாரண மக்களைச் சென்றடைய வேண்டும். பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்தாமல், அந்த முடிவுகளை கீழ்மட்டத்திலுள்ள மக்களுக்கு வழங்க முடியாது. எனவே, எங்கள் முதல் சவால் பொருளாதாரத்தை பலப்படுத்துவதாகும்.இப்போது நாங்கள் எதிர்கொள்ளும் சவால் பொருளாதாரத்தில் அடையப்பட்ட இந்த வெற்றிகளை கீழ்மட்டத்தைச் சென்றடைய இடமளிப்பதாகும். இந்த ஆண்டு, எங்கள் வரவு செலவுத்திட்டம் முற்றிலும் அந்த நோக்கத்தையே கொண்டுள்ளது

குற்றங்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணைகளை நாம் ஒருபோதும் அரசியல் கோணத்தில் நடத்துவதில்லை. லஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் என்பன தேவையான விசாரணைகளை நடத்துகின்றன. தேவையான வசதிகளை மட்டுமே நாங்கள் வழங்குகிறோம். அதற்கான அழுத்தம் கொடுப்பது எங்கள் பணியல்ல

மேலும், நமது நாடு எதிர்கொண்டுள்ள போதைப்பொருள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்க நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.

சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய எமக்கு தேவையாக இருந்தது. நமது நாட்டில், அதிகாரத்திற்கும் செல்வத்திற்கும் முன்பாக வலைந்து கொடுக்கும் ஏழைகளைத் தண்டிக்கும் ஒரு சட்டம் இருந்தது. நமது நாட்டில் சட்டத்தை நெருங்கக்கூடியவர்களும், முடியாதவர்களும் இருக்கிறார்கள் என்ற ஒரு கருத்து நாட்டிலும் பொது சமூகத்திலும் இருந்தது. இருப்பினும், இன்று இலங்கையில் சட்டத்தை அடைய முடியாத எந்தவொரு நபரும் இல்லை என்பதை நடைமுறையில் நிரூபித்து வருகிறோம். யார் வேண்டுமானாலும் சட்டத்தை அணுக முடியும். இலங்கையில் இதுபோன்ற ஒரு தீர்க்கமான திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. நாட்டில் சட்டத்தின் ஆட்சியை முறையாக நிலைநாட்டுவது நமது பொறுப்பாகும். நாம் எடுத்துள்ள முன்னெப்புகளை தொடர்ந்து முன்கொண்டு செல்வோமே தவிர பின்நோக்கி திருப்ப மாட்டோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button