முச்சந்தி

குவியலாக மூன்று எலும்புக் கூடுகள்; ஒன்றன் மேல் ஒன்றாகவும் வருகிறது

செம்மணி மனித புதைகுழியில் மூன்று மனித எலும்புக்கூடுகள் குவியலாக போடப்பட்டிருந்தது என சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார்.

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் 39வது நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்டது.

அகழ்வுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று முன்தினம் மூன்று மனித மண்டையோட்டு தொகுதிகளோடு காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள் குவியலாக போடப்பட்டிருந்தது. அதுவும் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தது – என்றார்.

இதேவேளை மனித புதைகுழியின் மற்றொரு பகுதியில் ஐந்து மனித எலும்புக்கூடுகள் மிக அருகருகில் காணப்பட்டன.

கடந்த சிலதினங்களாக இங்கு அடையாளம் காணப்படும் எலும்புக் கூடுகள் ஒன்றன் மேல் ஒன்றாகவும் ஒன்றை ஒன்று கட்டிப் பிடித்தவாறும் இருப்பதும் அவதானிக்கப்பட்டு வருகிறது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *