பலதும் பத்தும்
குடும்பத்திலிருந்து தப்பிப்பதற்கு இறந்ததாக நாடகமாடியவருக்கு சிறை

புதிய வாழ்வை ஆரம்பிப்பதற்கான முயற்சியொன்றாக ஐரோப்பாவுக்குச் செல்வதற்காக தனது இறப்பை போலியாக்கிய ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்ஸினைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு 89 நாள்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மீன்பிடிப் பயணத்தின்போது 2024ஆம் ஆண்டு ஓகஸ்டில் 45 வயதான குறித்த நபர் காணாமல் போய், தனது அலைபேசி, அடையாள அட்டை, கவிழ்ந்த படகையே விட்டு வைத்திருந்தார்.
இவர் கனடாவுக்குச் சென்று பின்னர் ஜோர்ஜியாவுக்குச் சென்றுள்ளார்.
![]()