முச்சந்தி

ஆஸியில் ஈரான் தூதவர் நாடுகடத்தல்; விரிசலடையும் இராஜதந்திர முரண்பாடுகள்!…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

( பாலஸ்தீன தனியரசை அவுஸ்திரேலிய அரசு அங்கீகரித்தன் பின்னர், கடந்த இருவாரங்களில் இஸ்ரேல் – அமெரிக்க அரசுகளால் தொடர் அரசியல் அழுத்தங்களை கன்பரா அரசு சந்திக்க வேண்டியிருந்தது. இதன் இன்னொரு விளைவாகவே ஆஸி அரசு தற்போது, ஈரான் தூதவரை வெளியேற்றுகிறது. அது மாத்திரமன்றி விரிசலடையும் இராஜதந்திர முரண்பாடுகளால் இருநாடுகளிலும் தூதுரகங்கள் மூடப்படுகின்றன)

மேற்குலக ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீன மக்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில், ஆஸி அரசும் தனது பாலஸ்தீன தனயரசு நிலைப்பாட்டை தெளிவாக விளக்கி வருகிறது. ஆயினும் இஸ்ரேலிய அரசின் கடுங் கண்டனத்துக்கும் உள்ளாக வேண்டியுள்ளது.

பாலஸ்தீன தனியரசை அவுஸ்திரேலிய அரசு அங்கீகரித்தன் பின்னர், கடந்த இருவாரங்களில் இஸ்ரேல் – அமெரிக்க அரசுகளால் தொடர் அரசியல் அழுத்தங்களை கன்பரா அரசு சந்திக்க வேண்டியிருந்தது.

கடந்த 2023 முதல் பாலஸ்தீன – இஸ்ரேல் இடையே போர் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த போரில் இதுவரை காசாவைச் சேர்ந்த 61 ஆயிரம் பொது மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த கோரமான போர் விவகாரத்தில் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இஸ்ரேலை கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை தெரிவித்திருந்தார். இதற்கு இஸ்ரேல் அரசும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.

இந்நிலையில் இஸ்ரேலிய – அமெரிக்க உளவு அமைப்புகளின் அழுத்தங்களை ஆஸி அரசும் எதிர்கொண்டு வருகிறது. இதன் விளைவாகவே நீண்டகாலமாக ஈரானுடன் வர்த்தக உறவைப் பேணிய ஆஸி அரசு தற்போது, ஈரான் தூதவர் வெளியேற்றுவது மாத்திரமன்றி, விரிசலடையும் இராஜதந்திர முரண்பாடுகளால் இருநாடுகளிலும் தூதுரகங்கள் மூடப்படுகின்றன.

ஈரான் தூதவர் வெளியேற்றம் :

ஈரானுக்கு எதிரான முக்கிய காரணங்களில் சிட்னி நகரத்தில் அமைந்திருந்த யூதர்களின் உணவகத்தின் மீது கடந்த வருடம் 2024 ஒக்டோபரிலும், மெல்பேர்ண் நகரத்தில் யூதக் கோயில் மீது கடந்த 2024 டிசம்பரிலும், தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்தத் தாக்குதல்களை, ஈரான் அரசுதான் இயக்கியுள்ளது என்பதற்கு போதுமான ஆதாரங்களை அவுஸ்திரேலியாவின் புலனாய்வுத் துறை திரட்டியுள்ளதாக, பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஈரானுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளும் முறிக்கப்படுவதாகவும், அத்துடன், அவுஸ்திரேலியாவுக்கான ஈரானின் தூதர் அஹமது சதேகி கட்டாயமாக வெளியேற்றப்படுவார் எனவும் கன்பரா அரசு தெரிவித்துள்ளது.

மேலும் ஈரான் நாட்டிலுள்ள அவுஸ்திரேலிய அதிகாரிகள் அனைவரும் தாயகம் திரும்புமாறும் ஆஸி அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நாட்டிலுள்ள அவுஸ்திரேலிய பிரஜைகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விரிசலடையும் இராஜதந்திர முரண்பாடுகளால் ஈரான் அரசுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொள்வதாக அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. அத்துடன் ஈரானில் வசிக்கும் அவுஸ்திரேலியர்கள் கைது செய்யப்படலாம் எனவே உடனடியாக வெளியேறுங்கள் எனவும் ஆஸி அரசு எச்சரித்துள்ளார்.

இருதரப்பு உறவுகளின் சூழல்

ஈரானுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான உறவுகள் ஒருபோதும் எளிதாக இருந்ததில்லை. ஆனால் இப்போது அவை விரிசல் நிலையை எட்டுவது போல் தெரிகிறது. சமீபத்திய ஆண்டுகளில், பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிப்பதாகவும் மனித உரிமைகளை மீறுவதாகவும் குற்றம் சாட்டி, கான்பரா ஈரான் மீது தடைகளை விதித்துள்ளது. அதிகரித்து வரும் உள்நாட்டு அழுத்தங்களுக்கு மத்தியில், தெஹ்ரானை நோக்கிய தனது உறுதியை நிரூபிக்க அவுஸ்திரேலியாவின் முயற்சியாக தூதரை வெளியேற்றும் முடிவு பார்க்கப்படுகிறது.

ஈரான் தூதரின் வெளியேற்றம், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு அதன் மக்களின் எதிர்வினை குறித்த அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அச்சத்தின் தெளிவான வெளிப்பாடாகும் என்கிறார் தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய ஆய்வுகள் பேராசிரியர் ஃபோட் இசாடி.
அண்மையில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் சிட்னியில் சாதனை எண்ணிக்கையை எட்டியுள்ளன. அவுஸ்திரேலியாவிலும் பாலஸ்தீன பிரச்சினை ஒரு பரபரப்பான விஷயமாக மாறியுள்ளது என்பது உண்மையாகும்.
புவிசார் அரசியலில் இந்த நெருக்கடி மேற்கத்திய நாடுகளுக்கும் மத்திய கிழக்குக்கும் இடையிலான உறவுகளை வகைப்படுத்தும் பலவீனமான இயக்கவியலை எடுத்துக்காட்டுகிறது.

அவுஸ்திரேலியா தனது சர்வதேச உறவுகளில் சமநிலையை பராமரிக்க முடியுமா, அல்லது தெஹ்ரானிடமிருந்து ஒரு உறுதியான விலகலை உடனடியாக எதிர் பார்க்க முடியாது.

புரட்சிகர பாதுகாப்பு படைக்கு தடை :

இன்னுமோர் அதிரடியாக, ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படைகளை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க அவுஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் கடந்த வருடம் இடம்பெற்ற யூத எதிர்ப்பு தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் ஈரானின் உளவு அமைப்பு இருந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரு யூத எதிர்ப்பு தாக்குதல் மற்றும் இஸ்ரேலிய எதிர்ப்பு சம்பவங்களுக்கு ஈரான் காரணமாக இருந்துள்ளமையை அவுஸ்திரேலிய உளவு பிரிவுகள் உறுதி செய்துள்ளன எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

இதன் காரணமாகவே அவுஸ்திரேலியாவில் உள்ள ஈரான் தூதுவரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரானில் உள்ள தூதரக செயற்பாடுகளை அவுஸ்திரேலியா அரசு இடை நிறுத்தவுள்ளது.

அவுஸ்திரேலிய குற்றச்சாட்டும்- தெஹ்ரானின் எதிர்வினையும்:

அவுஸ்திரேலிய குற்றச்சாட்டுகளும் தெஹ்ரானின் எதிர்வினையும் இருதரப்பு உறவுகளின் சூழல் எதிர்கால வர்த்தக வாய்ப்புகளில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. ஈரானுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இராஜதந்திர நெருக்கடி ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. பரஸ்பர குற்றச்சாட்டுகள் புவிசார் அரசியலில் தீவிரமான – கடுமையான நடவடிக்கைகளாக எழுந்துள்ளன.

இரு நாடுகளிடையே பதற்றம் தெளிவாகத் தெரிகிறது. மேலும் நிகழ்வுகள் விரைவான வேகத்தில் வெளிப்படுகின்றன. இதையெல்லாம் தூண்டியது யார் என்பதை பலரும் புரிந்துகொள்ள மாட்டார்கள். ஏனெனில் இதன் பின்னணியில் இஸ்ரேலிய – அமெரிக்க உளவு அமைப்புகளின் பங்களிப்பு இருக்கிறது என்பது தெளிவாகிறது.

அவுஸ்திரேலியாவில் பல கடுமையான நாசவேலைச் செயல்களுக்கு ஈரான் பொறுப்பு என்றும் கூறப்பட்டதற்கு எதிராக மறுபுறம், ஈரான் சும்மா நிற்கவில்லை. ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி ஆஸ்திரேலிய குற்றச்சாட்டுகளை “முற்றிலும் ஆதாரமற்றது” என்று அழைத்தார். இதனை பழிவாங்கும் நடவடிக்கைகள் என அழைத்தார்.
ஏற்கனவே சிக்கலான சூழலில், இந்த நடவடிக்கைகள் அவுஸ்திரேலியாவின் உள் அரசியல் முன்னேற்றங்களால், குறிப்பாக நாட்டில் நடந்த பெரிய பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக பகாயி பரிந்துரைத்தார்.

ஆனால் அவுஸ்திரேலிய உள்நாட்டு அரசியல் உண்மையில் சர்வதேச உறவுகளில் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஈரானிய விடயம் வலுவாக ஏற்படுத்த முனைந்துள்ளது.
2ம் உலகப்போரின் பின் வெளியேற்றம்:

அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு (ASIO), இஸ்ரேலிய மத நிறுவனங்கள் மீது குறிவைத்து தாக்குதல்களில் ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது.

இவை அவுஸ்திரேலிய மண்ணில் ஒரு வெளிநாட்டு நாட்டால் திட்டமிடப்பட்ட அசாதாரணமான மற்றும் ஆபத்தான ஆக்கிரமிப்புச் செயல்கள் என்று ஆஸி அரசால் கூறப்படுகிறது.

இதன் விளைவாக ஈரானிய தூதர் அஹ்மத் சடேகி மற்றும் மூன்று தூதரக ஊழியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அவுஸ்திரேலியா ஒரு வெளிநாட்டு தூதரை வெளியேற்றுவது இதுவே முதல் முறை ஆகும்.
பாலஸ்தீனம் அங்கீகாரம் காரணமா ?

பாலஸ்தீனம் ஐநாவில் முழுமையாக அங்கீகரிக்கப்படும் நிலைக்கு வந்துள்ளது. பல தசாப்த போராட்டங்களின் பின்னர் உலகமெங்கும் பாலஸ்தீன ஆதரவுக் குரல், ஒரு தேச அங்கீகாரமாக மாறி வருகிறது. மேற்குலக வரலாற்றில் பிரான்ஸின் முதல் அங்கீகார நகர்வு பாலஸ்தீன மக்களின் தேசக் கோரிக்கையை மற்றய சர்வதேச நாடுகளும் பின்பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அழுத்தம் மேற்குலக நாடுகளின் மேலாக இருந்தாலும், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பாலஸ்தீன அங்கீகாரம் வலுப்பெற்று வருகிறது. இஸ்ரேலும் பாலஸ்தீனமும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அமெரிக்கா கூறுகிறது. ஆனால் இதன் விளைவாக பாலஸ்தீனம் தனி நாடாவதைத் தடுக்கும் அதிகாரம் இஸ்ரேலுக்கு வழங்கப்படுவதுதான் இறுதியில் மிச்சம் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இஸ்ரேலின் காசா மீதான கொடும் போர் மனிதாபிமான கேள்விகளைத் தீவிரமாக உலகெங்கும் எழச் செய்துள்ளது. அண்மையில் பிரான்ஸ் முதல் ஜி 7 நாடாக, ஐநாவில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்போம் எனத் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடாவும் இதே முடிவை எடுத்துள்ளது. சீனா, ரஷ்யா ஆகியவை ஏற்கனவே தேசங்களாக அங்கீகரித்துள்ளன.

பாலஸ்தீன தனியரசை அவுஸ்திரேலிய அரசு அங்கீகரித்தன் பின்னர், கடந்த இருவாரங்களில் இஸ்ரேல் – அமெரிக்க அரசுகளால் தொடர் அரசியல் அழுத்தங்களை கன்பரா அரசு சந்திக்க வேண்டியிருந்தது.

இந்நிலையிலேயே இஸ்ரேலிய – அமெரிக்க உளவு அமைப்புகளின் அழுத்தங்களை ஆஸி அரசும் எதிர்கொண்டு வருகிறது. இதன் காரணமாகவே ஈரான் தூதவர் வெளியேற்றுவது மாத்திரமன்றி, இராஜதந்திர முரண்பாடுகளால் இருநாடுகளிலும் தூதுரகங்கள் மூடப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *