கவிதைகள்

கண்ணீர் கங்கைகளும் குருதி ஆறுகளும்… கவிதை… ரவிச்சந்திரா

ஈழக் கனவினை எம் ஈரக்கருவிழிகள்
களிப்புறக் காணுமுன்-மூடித்துயிலுறுமோ
என் உடல்தான் பேச்சடங்கி மூச்சடங்கி
பிணமாய் வாடித்துயருறுமோ?

இரத்தக் கறைபடிந்த கவிதை ஏடு
தீயிலும் மழையிலும் காற்றிலும் நடுங்கி
நனைந்து ஒழுங்கு கலைந்த
வரலாற்றுச் சுவடு

கண்ணீர் திரையிட்ட விழிகளோடு
கவனமாய்ப் பிரித்துப் படிக்கின்றேன்
கண்ணீர் செந்நீர் பாய்ந்த வரலாறு
அண்ணன் தம்பியைக்; கொன்ற சீர்கேடு

இயக்க மோதல்களால் சீரழிந்த
எங்கள் தாயகக் கனவு
இன்றும் ஒற்றுமையின்றி பாழாகும்
ஈழவர் உறவு

இன்பமே சூழ்க-எல்லோரும் நலமே வாழ்க
(லோக சமஸ்தா சுகினா பவந்து)
எல்லாப் புகழும் இறைவனுக்கே

 

 

 

 

ரவிச்சந்திரா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *