பலதும் பத்தும்
ஆளில்லா இடத்தில் குள நீரில் 9 நாள்கள் தப்பித்த நபர்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் பாரிய ஆளில்லாப் பிரதேசத்தில் காணாமல் போயிருந்த நபரொருவர் கல்லொன்றில் உதவியென்ற வார்த்தையைப் பதித்ததுடன், சகதியில் எஸ்.ஓ.எஸ் என வரைந்ததையடுத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
ஹெலிகொப்டரொன்று குறித்த நபரின் ட்ரக்கை வன வீதியொன்றில் கண்டதையடுத்தே தேடுதல் பகுதி குறுகியதாய் மாறியிருந்தது.
புகலிடமொன்றை அமைத்தது உள்ளடங்கலாக பல்வேறு உபாயங்களை தப்பிப்பதற்கான குறித்த நபர் கையாண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
![]()