பலதும் பத்தும்

மன்னார் மடு திருத்தல திருவிழா திருப்பலிக்கான முன் ஆயத்த நடவடிக்கைகள்

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலிக்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் மடு திருத்தலத்தில் நடைபெற்றுள்ளது.

மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15ஆம் திகதி விசேட திருவிழாவாக இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், முன்னாயத்தம் தொடர்பான கலந்துரையாடல் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசத்தின் பங்குபற்றுதலுடன் மடு திருத்தல மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

திருவிழாவில் கலந்து கொள்ளச் செல்லும் பக்தர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டிய சகல விதமான ஏற்பாடுகள் தொடர்பில் இதன்போது துறைசார் திணைக்களங்களுடன் கலந்துரையாடப்பட்டது.

அதேவேளை, சட்டம் ஒழுங்கை பின்பற்றும் வகையில் முப்படையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button