இலங்கையில் இணைய வழி சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் கைது

இலங்கையின் தலங்கம பகுதியில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 11 இந்தியர்களை திலங்கம போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று (ஆகஸ்ட் 4) இரவு, தலங்கம, அக்குறேகொடை பகுதியில் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் தலங்கம காவல் நிலைய அதிகாரிகள் நடத்திய சோதனையில் இந்த கைதுகள் இடம்பெற்றன.
இந்த சோதனையின் போது, கணினிகள் மற்றும் மொபைல் போன்களைப் பயன்படுத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட எட்டு ஆண்களும் மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 20 மொபைல் போன்கள், மூன்று மடிக்கணினிகள் மற்றும் ஒரு டப்லெட் சாதனம் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட பெண்களின் வயதுகள் 22, 30, மற்றும் 43 ஆகும். ஆண்களின் வயதுகள் 25, 26, 27, மற்றும் 29 ஆகும். இவர்கள் அனைவரும் இந்தியர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தலங்கம போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
![]()