நோயிலிருந்து நம்மை காப்பாற்றும் நமது மூளை!

சுவிட்சர்லாந்து லாசான்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையைச் சேர்ந்த நரம்பியல் வல்லுநர் அண்ட்ரியா செரினோ தலைமையிலான குழு இதை ஆராய்ந்துள்ளது.
இவர்கள் கண்டுபிடித்தது என்னவென்றால், நோய் பாதித்த ஒருவரை நாம் பார்க்கும்போதே நமது மூளை நமது நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டி, உடலை தயார் செய்கிறது. இது எப்படி சாத்தியம்? வாங்க பார்க்கலாம்….
உடல் நோய்வாய்ப்பட்டவர்களைப் பார்க்கும்போது நமது மூளை எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றிய ஒரு புதிய ஆய்வு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது எப்படி நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள சுவிட்சர்லாந்தின் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களான அந்திரியா செரினோ மற்றும் அவரது குழு, மூளை ஸ்கேன்கள், ரத்த பரிசோதனைகள் மற்றும் சிறப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆய்வு செய்துள்ளனர்.
இந்த ஆய்வில், நோய் அறிகுறிகள் காட்டும் உருவங்கள் தன்னார்வலர்களை நெருங்கியபோது, அவர்களது மூளையின் சில பகுதிகள் செயல்படத் தொடங்கின. இந்தப் பகுதிகள், நமது உடலைச் சுற்றியுள்ள இடத்தைக் கவனிக்க உதவுகின்றன.
குறிப்பாக நமக்கு அருகில் ஏதேனும் ஆபத்து இருக்கிறதா என்பதை உணர்கின்றன. பின்னர், மூளையின் ‘salience network’ என்ற பகுதி செயல்படுகிறது.
இந்த செல்கள், நோய்க் கிருமிகளை எதிர்கொள்ள முதல் பாதுகாப்பு அணியாக செயல்படுகின்றன. நோய் அறிகுறிகள் காட்டும் உருவங்களைப் பார்த்தவர்களிடம் இந்த செல்களின் எண்ணிக்கை, ஆரோக்கியமான உருவங்களைப் பார்த்தவர்களை விட அதிகமாக இருந்தது.
இது தடுப்பூசி பெற்றவர்களிடம் காணப்பட்ட நோய் எதிர்ப்பு செயல்பாட்டுடன் ஒப்பிடக்கூடியதாக இருந்தது.
இந்தக் கண்டுபிடிப்பு, மூளையும் நோய் எதிர்ப்பு அமைப்பும் எப்படி ஒன்றிணைந்து பணியாற்றுகின்றன என்பதை வெளிப்படுத்துகிறது.
இது உடலின் இரண்டு சிக்கலான அமைப்புகள் ஒன்றிணைந்து சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க உதவுவதை காட்டுகிறது. ஆராய்ச்சியாளர்கள், இந்த கண்டுபிடிப்பு தடுப்பூசிகளை மேம்படுத்த உதவலாம் என்று நம்புகின்றனர்.
VR-ஐ பயன்படுத்தி, தடுப்பூசிகள் மூலம் இலக்கு வைக்கப்படும் நோய் எதிர்ப்பு செல்களை அதிகரிக்க முடியும். இது தடுப்பூசியின் பலத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்த உதவும்.
இந்த ஆய்வு, நமது மூளை எப்படி எதிர்கால ஆபத்துகளுக்கு முன்னதாகவே தயாராகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
நோய் தொற்று நடக்காமலேயே உடல் தயாராகி, நம்மை பாதுகாக்கிறது. இது நமது உடலின் அற்புதமான திறன்களை உணர்த்துகிறது, மேலும் இதை மருத்துவத்தில் பயன்படுத்தி நம்மை நோய்களிலிருந்து காக்கலாம்.
![]()