பலதும் பத்தும்

மாங்கல்ய பாக்கியம் தரும் ஆடிப்பெருக்கு நாளை

பஞ்சபூதங்களில் முக்கியமானது நீர். நீரில் இருந்தே உயிர்கள் தோன்றியதாக சொல்லப்படுகிறது.

அதனால் நீரை போற்றி, வணங்கி, நீருக்கும், ஆறுகள் போன்ற நீர் நிலைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக ஆடிப் பெருக்கு கொண்டாடப்படுகிறது.

இதனடிப்படையில் நாளைய தினம் (03) ஆடிப் பெருக்கு கொண்டாடப்படவுள்ளது.

இந்த நாளில் எதை துவங்கினாலும் அது பல மடங்காக பெருகி, நமக்கு வெற்றியை தரும் என்பது ஐதீகம்.

ஆறு நீரையும், மழையையும் மட்டுமே நம்பி விவசாயம் செய்த காலம் என்று ஒன்று இருந்தது.

இந்த சமயத்தில் நெல், கரும்பு போன்றவற்றை விதைத்தால் தான், தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும்.

இதற்காக நதிகளை தெய்வமாக கருதி போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின்னர் விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிக்கின்றனர்.

ஆடி மாதம் விவசாய பணிகளை துவங்க செல்லும் விவசாயிகள் நில மகளையும், நீர் மகளையும் வணங்கி விட்டு, மண் செழித்து, விவசாயம் செழித்து, எங்கள் குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்ளும் நாளாக ஆடிப் பெருக்கு திருநாளை கொண்டாடும் வழக்கம் ஏற்பட்டது.

ஆடி மாதத்தில் வரும் 18ஆம் திகதி, ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுவதுடன், இதை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் மக்கள் அழைக்கின்றனர்.

ஆடிப்பெருக்கு அன்று திருமணமானவர்கள், தங்கள் தாலியில் உள்ள மஞ்சள் கயிற்றை நீக்கி விட்டு, புதிய மஞ்சள் கயிற்றை தன் கணவன் கையால் கட்டிக்கொள்வர்.

இதன்மூலம் அவர்களது மாங்கல்ய பாக்கியம் நீடிக்கும் என்பதும், வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதும் நம்பிக்கை.

திருமணமாகாத பெண்களும் அம்மனை வேண்டி மஞ்சள் கயிறை கட்டிக் கொள்கிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் அடுத்த ஆடி மாதத்திற்குள் அவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கையாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button