முச்சந்தி

திருகோணமலையில் நான்கு ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை – தீயிட்டு அழிப்பு

திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவுட்குட்பட்ட கந்தளாய் காட்டுப் பகுதியில் பயிரிடப்பட்டடிருந்த கஞ்சா தோட்டம் விசேட அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

சுமார் நான்கு ஏக்கர் பரப்பில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்த நிலையில் குறித்த பகுதி முற்றுகையிடப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமை இந்த முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மேலும், குறித்த பகுதியில் மிகவும் நுட்பமான முறையில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்ததாகவும், சூரிய சக்தி மூலும் மின்சாரம் பெறப்பட்டு நீர் பாய்ச்சி இந்த கஞ்சா தோட்டம் பயிரிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button