முச்சந்தி

இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒருவர் சம்பந்தன்

இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒருவராக மறைந்த இரா.சம்பந்தன் உள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற ராஜவரோதயம் சம்பந்தன் மீதான அனுதாபப் பிரேரணையில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒருவராக மறைந்த இரா.சம்பந்தன் இருந்தார். அவரின் செயற்பாடுகள் அனைவருக்கும் முன்மாதிரியானவையே. எப்போதும் அவர் மக்கள் தொடர்பிலேயே சிந்தித்து நடந்துகொண்டார். அவர் ஒரு மனிதாபிமானத்திற்கு சிறந்தவொரு ஆலோசகரும் கூட. பல சந்தர்ப்பங்களில் சமுக, பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கதைத்துள்ளார். அரசியலில் சிறந்தவொரு தலைவராக செயற்பட்டார்.

எமது அரசியல் வரலாற்றில் உருவாகிய சிரேஷ்ட தலைவர்களிடையே சிறந்த குணாம்சங்களுடன் மதிப்பு மிக்க அரசியல்வாதியாக, நாட்டின் இறையாண்மை, அரசியல் சுதந்திரத்திற்காக பங்களிப்பு செய்த, தான் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களின் சிவில், கலாச்சாரம் உள்ளிட்ட மனித உரிமைகளுக்காக பங்களிப்பு

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button