முச்சந்தி
இந்தியத் தலைநகர் புது டெல்லியில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் !

நாற்பத்திரண்டு ஆண்டுகள் கடந்தும் தமிழ்த் தேசிய இனத்தின் நிலையான இருப்பிற்காக தமிழ் மக்கள் இலட்சிய உறுதியோடு போராடி வருகின்றனர். கறுப்பு யூலையின் கனத்த நினைவுடன் இந்தியத் தலைநகர் புது டெல்லியில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற உள்ளது.

கருப்பு ஜூலை நிகழ்வுகளில் இழந்த அப்பாவி தமிழ் குடிமக்களின் வாழ்க்கையை தொடர்ந்து நினைவில் கொள்வதாக “இந்துப் போராட்டக் குழு” (HINDU STRUGGLE COMMITTEE) தெரிவித்துள்ளது. மேலும் இந்த படுகொலைகளுக்கு பொறுப்பானவர்கள் நீதிக்கு கொண்டு வரப்படும் வரை தமிழ் மக்களுக்காக தொடர்ந்து வாதிடும் என்றும் “இந்துப் போராட்டக் குழு” சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்களுக்கான நீதியை நாங்கள் கோருவதுடன், இலங்கைத் தமிழர்களின் கலாச்சார மற்றும் இனப் படுகொலையை நினைவுகூரும் வகையில் எதிர்வரும்
ஜூலை 24, 2025 பிற்பகல் 2:30 மணிக்கு அரசியலமைப்புச் சங்கம், (CONSTITUTION CLUB, DELHI, INDIA) புது டெல்லி, இந்தியா எனும் முகவரியில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நடைபெற உள்ளது.

![]()