பலதும் பத்தும்

இந்தியாவில் இருந்து புறப்பட்டது இங்கிலாந்தின் போர் விமானம்!

இங்கிலாந்தின் கடற்படையை சேர்ந்த எப்-35 பி என்ற நவீன போர் விமானம் ஒன்று, கடந்த ஜூன் 14 ஆம் திகதி கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டது.

உலகின் அதிநவீன போர் விமானம் என அறியப்படும் இந்த விமானம் பல வாரங்களாக கேரளாவை விட்டு வெளியேறாது இருந்த நிலையில், புறப்பட்டு சென்றுள்ளது.

கேரள சுற்றுலா கழகம் விளம்பரம்

அந்த விமானம் தொழில்நுட்ப கோளாறால் தரையிறக்கம் செய்யப்பட்டது என்றும் பராமரிப்பு பணிக்கு பின்னர் கிளம்பி சென்றுள்ளது என்றும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை இங்கிலாந்தின் இந்த போர் விமானம், ஏறக்குறைய ரூ.950 கோடி மதிப்பு கொண்டது.

அதேவேளை , இங்கிலாந்து விமானம் நீண்ட நாட்களாக கேரளாவில் இருந்ததால் , ஒருமுறை வந்து விட்டால், கிளம்பி செல்வதற்கு மனமில்லாத அளவுக்கு இயற்கை வளம் நிறைந்தது கேரளா என கேரள சுற்றுலா கழகம் விளம்பரப்படுத்தி இருந்தது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா நாட்டின் டார்வின் நகருக்கு இங்கிலாந்து போர் விமானம்கேரளாவில் இருந்து புறப்பட்டு சென்றது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button