நிகழ்வுகள்

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயதில் வருடாந்த பரிசளிப்பு விழா

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா  கடந்த   சனிக்கிழமை அதிபர் எஸ். ஜெகதீஸ்வரன்  (SLEAS – II)    தலைமையில் கொட்டகலை வூட்டன் ஹில்ஸ் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு நுவரெலிய கல்விப் பணிமனையின் வலயக்கல்விப் பணிப்பாளர் டி.எம்.எஸ்.டி. திசாநாயக்க  (SLEAS – I)  , கல்வி அமைச்சின் தோட்டப் பாடசாலைகளுக்கான பிரதி கல்வி பணிப்பாளர் எம். செந்தில் வதனி (SLEAS – I) NDT, BSc, PGDE, MSc, MPAEM ஆகியோர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன், கௌரவ விருந்தினராக ஜனாதிபதி செயலகத்தின் பணிப்பாளர் மற்றும் நு /கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் பெருமைக்குரிய பழைய மாணவி திருமதி ஏ. கவிதா (இலங்கை திட்டமிடல் சேவை – I)
BSc (Hons), MA (அரசியல் அறிவியல்  அமெரிக்கா) கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சிறப்பு விருந்தினர்களாக நுவரெலியா கோட்டம்  II     இன் அதிபர்கள், நுவரெலியா கல்வி வலயத்தின் சேவைக்கால ஆலோசகர்கள், நுவரெலியா கோட்டம்  II     இன் வளவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மேற்படி கடந்த ஆண்டுகளில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட மாணவர்கள் , கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளையும் உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று மாவட்ட நிலையில் தரங்களை பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் மற்றும் கடந்த ஆண்டுகளில் பல்வேறு நிகழ்வுகளில் பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தி வலயமட்ட,மாகாணமட்ட தேசிய மட்ட ரீதியில் தங்களின் திறமையை நிலைநாட்டிய சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் மற்றும் பண பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button