முச்சந்தி

பிள்ளையானுடன் அரசாங்கத்திற்கு எந்த டீலும் கிடையாது

பிள்ளையானுடன் அரசாங்கத்திற்கு எந்த டீலும் கிடையாது. அவ்வாறு டீல் இருந்திருந்தால் இனிய பாரதி கைதாகியிருப்பரா? என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் உண்மையை வெளிப்படுத்துவோம், சூத்திரதாரிகள் மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவோம்.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியில் இருந்து ஒரு துளியளவேனும் விலக மாட்டோம்.

விசாரணைகளை துரிதமாக முடித்து சகல இலங்கையர்களுக்கும் நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவே முயற்சிக்கின்றோம்.

ஆனால் பல்வேறு காரணங்களால் இதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் நாங்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வோம் என்பதனை உறுதியாக கூறிக்கொள்கின்றோம்.

இதேவேளை இந்த விடயத்தில் தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம். பயங்கரவாத தடைச்சட்டத்தில் சிறையில் உள்ள பிள்ளையானுடன் அரசாங்கம் டீல் வைத்திருப்பதாக குறிப்பிடுவதை முற்றாக நிராகரிக்கிறோம். மக்களுடனேயே டீல் உள்ளது. அந்த டீலை முறையாக செயற்படுத்துவோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button