கவிதைகள்

மலரோடு நானிங்கு வந்தேன்!…. கவிதை… சங்கர சுப்பிரமணியன்

மலர் ஒன்று வசந்தத்தில் மலர்கிறது
மலர்ந்த மலர் மணமதை பரப்புகிறது
மலர் ஈர்ப்பால் வண்டொன்று வருகிறது
மலர்மீது வந்த வண்டும் அமர்கிறது

மலரில் வண்டு தேனைக் காண்கிறது
மலர்த் தேனை உண்டு மகிழ்கின்றது
மலரின் மகரந்தத் தூளும் சூல்முடிவழி
மலரின் சூலகத்தையும் அடைகிறது

மலரில் மகரந்த சேர்க்கை நிகழ்ந்திட
மலர் சூல்கொண்டு இனவிருத்தி செய்கிறது
மலரை வைத்து கவிதையும் வடித்தான்
மலரையே பெண்ணாக்கி கவிதை தந்தான்

அழகு சிரிக்கிறது ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கிறது பக்கம் வருகின்றதென
அழகு கவிதையில் அனைத்தும் தந்தான்
பழந் தமிழினிமையில் பாக்கள் பல தந்தான்

சங்கர சுப்பிரமணியன்

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *