பலதும் பத்தும்

கொழும்பில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வு

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு,  இலங்கையின் பல பகுதிகளிலிருந்து வந்த சுமார் 1,000 யோகா ஆர்வலர்கள் கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் ஒன்றுகூடி, ஒருங்கிணைந்த யோகா மற்றும் தியான நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வை இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் (SVCC), இலங்கை சுகாதார அமைச்சு, இலங்கை பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இணைந்து ஏற்பாடு செய்தது.

இந்த ஆண்டுக்கான யோகா தின கருப்பொருள் “Yoga for One Earth, One Health” என்பதாகும். இது மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான சமநிலையை வலியுறுத்துகிறது.

இந்தியாவும் இலங்கையும் சேர்ந்த முன்னணி யோகா நிறுவனங்களின் நிபுணர்கள் வழிகாட்டியோடு யோகா மற்றும் தியான அமர்வுகள் நடத்தப்பட்டன.

விழாவின் ஒரு பகுதியாக, யோகா அறிவை எளிதில் மக்களுக்கு வழங்கும் நோக்கில், யோகா பென்ட்ரைவ் மற்றும் ஹத யோக பிரதீபிகா நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது.

அத்துடன், அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், கண்டி ஆகிய இடங்களில் உள்ள இந்திய தூதரகங்களும் தனித்தனி யோகா நிகழ்வுகளை ஏற்பாடு செய்தன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button