பலதும் பத்தும்

நாடு கடத்தப்படவிருந்த தமிழர் வழக்கில் வெற்றி

பிரித்தானியாவில் நாடு கடத்தலை எதிர்கொண்ட இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவருக்கு புகலிடம் வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பெயர் விபரங்கள் வெளியிடப்படாத குறித்த இலங்கையர், தமிழர் புனர்வாழ்வு கழகத்தில் பணிபுரிந்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய காரணத்தால் அவருக்கு புகலிடம் மறுக்கப்பட்டு நாடு கடத்தல் உத்தரவை பிரித்தானிய உள்துறை அலுவலகம் அறிவித்திருந்தது. இருப்பினும், 2023 ஆம் ஆண்டு அவர் செய்த மேன்முறையீடு தொடர்பான வழக்கு விசாரணை அண்மையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்பின்னர், குறித்த இலங்கையரை நாடு கடத்துவதில் உள்துறை அலுவலகம் தீவிர கவனம் செலுத்தியபோதும், நீதிமன்றம் அதனை தடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button