பலதும் பத்தும்

சுபான்சு சுக்லாவின் விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழு, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின், ஆக்சியம் ஸ்பேஸ் எனும் தனியார் நிறுவனம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பயண திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ இணைந்து இப்பணியை செய்து வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று, 14 நாட்கள் தங்கி ஆய்வு செய்ய தயாராக இருந்தனர்.

இதற்காக, அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் வாயிலாக வரும் 22 ஆம் திகதி விண்வெளிக்கு புறப்படுவதாக இருந்தனர்.

ஆனால், திடீரென இப் பயண திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரர்களின் சர்வதேச விண்வெளிப்பயணம் ஒத்திவைக்கப்படுவது இது 7-வது முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button