விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு

அகமதாபாத் விமான விபத்தில் இருந்து உயிர் தப்பிய ஒரே ஒரு பயணியின் புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனி நகரில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.
AI171 விமானமாக இயங்கும் போயிங் 78708 விமானம், இரண்டு விமானிகள் மற்றும் பத்து கேபின் பணியாளர்கள் உட்பட 242 பேரை ஏற்றிச் சென்றது. இதில் விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர்.
மேலும், மருத்துவ கல்லூரியின் விடுதியின் மீது விமானம் விழுந்ததால் மருத்துவ மாணவர்கள் 10 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விமானத்தில் உயிரிழந்தவர்களை தவிர விபத்தில் நடைபெற்ற இடத்தில் உயிரிழந்தவர்களையும் சேர்ந்து மொத்தம் இறப்பு எண்னிக்கை 274 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விபத்தில் விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்று ஒரே ஒரு பயணி மட்டும் தான் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். தற்போது, இவரது புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
![]()