பலதும் பத்தும்

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களை கௌரவிக்க இருக்கும் மன்னர் சார்லஸ்

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களை கௌரவிக்கும் வகையில், மன்னர் சார்லஸ் தனது பிறந்தநாள் விழாவில் மாற்றம் ஒன்றைச் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் உயிரிழந்தவர்களை கௌரவிப்பதற்காக…

இன்று பிரித்தானியாவில் Trooping the Colour ceremony என்னும் பாரம்பரிய நிகழ்வு நடைபெற உள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களை கௌரவிக்க இருக்கும் மன்னர் சார்லஸ் | King Charles Silent Honour For Plane Crash Victims

இந்த நிகழ்வு, பிரித்தானியாவை ஆளும் மன்னர் அல்லது ராணியின் பிறந்தநாளை அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடும் ஒரு நிகழ்வாகும்.

இந்நிலையில், ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களை கௌரவிக்கும் வகையில், Trooping the Colour ceremony நிகழ்வில் மாற்றம் ஒன்றைச் செய்ய இருப்பதாக மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

 

அதாவது, ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களை கௌரவிக்கும் வகையில், தனது பிறந்தநாள் விழாவின்போது அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்த முடிவு செய்துள்ளார் மன்னர்.

மேலும், ராஜ குடும்ப உறுப்பினர்கள், ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் நினைவாக கைகளில் கருப்புப் பட்டைகள் அணிய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

இது தொடர்பாக ராஜ குடும்பம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தானும் தனது மனைவி ராணி கமிலாவும் அகமதாபாத்தில் நடந்த பயங்கரமான நிகழ்வுகளால் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த பயங்கர துயர சம்பவம் காரணமாக பல நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ள அனைவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எங்கள் சிறப்பு பிரார்த்தனைகளும் ஆழ்ந்த அனுதாபங்களும் உரித்தாகட்டும் என்றும் மன்னரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அத்துடன், ‘இந்த மிகவும் துயரமான மற்றும் அதிர்ச்சிகரமான நேரத்தில் அவசர சேவைகளின் வீர முயற்சிகளுக்கும், உதவி மற்றும் ஆதரவை வழங்கும் அனைவருக்கும் நான் ஒரு சிறப்பு அஞ்சலி செலுத்த விரும்புகிறேன்’ என்றும் மன்னர் சார்லஸ் குறிப்பிட்டுள்ளார்.

லண்டனில் நடைபெறும் குதிரைப்படை வீரர்களின் அணிவகுப்பை பார்வையிட்டபின் மன்னர் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்த இருக்கிறார்.

மேலும், விபத்தில் பலியானவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, நேற்று பிரித்தானியாவில் அனைத்து ராஜ குடும்பத்தினரின் வீடுகள் மற்றும் அரசு கட்டிடங்களிலும், பிரித்தானியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button