பலதும் பத்தும்

இறந்தவர்கள் போல் நடித்து ஐரோப்பிய நாடொன்றை உலுக்கிய கோர சம்பவம்

ஆஸ்திரியாவின் மிக மோசமான பாடசாலை துப்பாக்கிச் சூட்டில் ஒரு முன்னாள் மாணவர் எவ்வாறு இந்த கோர சம்பவத்தை நடத்தினார் என்பது குறித்து பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.

தன்னைத்தானே சுட்டுக் கொண்ட

கிராஸ் பகுதியில் உள்ள தனது பழைய பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, கழிப்பறையில் தன்னைத்தானே சுட்டுக் கொண்ட 21 வயது துப்பாக்கிதாரி, சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளின் சட்டப்பூர்வ உரிமையாளர் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இறந்தவர்கள் போல் நடித்து... ஐரோப்பிய நாடொன்றை உலுக்கிய கோர சம்பவத்தில் புதிய தகவல் | Played Dead To Survive School Shooting

அந்த நபர் முன்னாள் மாணவர் என்றும், ஆனால் படிப்பை முடிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் 7 பெண்கள் உட்பட கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது 11 என அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச அளவில் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவம் ஆஸ்திரிய வரலாற்றில் மிக மோசமான நாளாக குறிப்பிடப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டுக்கு பதிலளிக்கும் விதமாக அனைத்து பொது நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாகவும், மூன்று நாட்கள் தேசிய துக்கம் அநுசரிக்கப்படும் எனவும் சேன்ஸலர் கிறிஸ்டியன் ஸ்டாக்கர் அறிவித்துள்ளார்.

இறந்தவர்கள் போல் நடித்து... ஐரோப்பிய நாடொன்றை உலுக்கிய கோர சம்பவத்தில் புதிய தகவல் | Played Dead To Survive School Shooting

கேலிக்கும் கிண்டலுக்கும்

இதனிடையே, பலர் இறந்தது போல் நடித்து துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், துப்பாக்கிதாரியின் குடியிருப்பில் இருந்து தற்கொலை கடிதம் ஒன்றையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இறந்தவர்கள் போல் நடித்து... ஐரோப்பிய நாடொன்றை உலுக்கிய கோர சம்பவத்தில் புதிய தகவல் | Played Dead To Survive School Shooting

குறித்த பாடசாலையில் கல்வி பயின்ற காலகட்டத்தில் கடுமையான கேலிக்கும் கிண்டலுக்கும் இலக்கானதாக துப்பாக்கிதாரி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button