பலதும் பத்தும்

பிரேசில் கால்பந்து நட்சத்திர வீரர் நெய்மருக்கு கோவிட்-19

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் சிகிச்சை பெற்று வருவதாக சாண்டோஸ் கழகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

கடந்த ஐந்தாம் திகதி நெய்மருக்கு நோய் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கின. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு கோவிட் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

வியாழக்கிழமை முதல் நெய்மர் பயிற்சி மற்றும் பிற நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. நெய்மருக்கு கோவிட் தொற்று ஏற்படுவது இது இரண்டாவது முறையாகும்.

முன்னதாக கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் அவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button