கவிதைகள்
கற்பனைக்குள் அடங்கா கவின்மிகு கவிதைகள்….. கவிதை – 9 ….. சங்கர சுப்பிரமணியன்

எண்ணமது எழுத்தானது:
தமிழை உயிரென்பான்
தமிழை வைத்து பிழைப்பான்
தமிழையே அழிப்பான்
கொட்டுகிறது பணம்
சொட்டுகிறது மக்களின் வியர்வை
பயனடைபவன் எவனோ?
கீதையில் சொன்னதென்பான்
சொத்துக்கள் நிலையற்றது என்பான்
சொத்துவாங்கி குவித்திடுவான்
ராம ராமவென்றான்
பாடியே பஜனை செய்தான்
உமாவர எழுந்தோடினான்
நூல் வெளியிட்டார்
நூல் பெரிதாக விற்கவில்லை
நூலாசிரியர் ஆகிவிட்டாரே
நடை சாத்தியிருந்தது
தேங்காயை நடையில் உடைத்தேன்
நடை கடவுளாகியது

![]()