முச்சந்தி

மீனவர்களிடையே இடம்பெற்ற முறுகலை தொடர்ந்து வாடிக்கு தீ வைப்பு; யாழ். வடமராட்சி பகுதியில் சம்பவம்

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் மீனவர்கள் மத்தியில் இடம்பெற்ற முறுகலை தொடர்ந்து நேற்று(7) இரவு கரைவலை வாடி ஒன்றிற்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவது,

செம்பியன்பற்று பகுதியில் உழவியந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து குறித்த பகுதியில் உழவியந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்து வந்தவர்களை  அகற்றும் செயற்பாடுகளில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது மீனவர்களுக்கிடையே முறுகல் நிலையும் ஏற்பட்டிருந்ததை தொடர்ந்து,

நேற்று இரவு செம்பியன்பற்று பகுதியில் உள்ள கரைவலை  வாடி ஒன்றுக்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.

இதில் இரண்டு லட்சம் பெருமதியான கடல் தொழில் உபகரணங்கள் முற்றாக நாசமாகியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button