பலதும் பத்தும்

முடிவுக்கு வரும் டெலிவரி ஊழியர் வேலை?

டெலிவரி வேலைக்கு மனித வடிவ ரோபோக்களை களமிறக்க உள்ள அமேசான் திட்டமிட்டு வருகிறது.

ஆன்லைன் வர்த்தகம் வளர்ச்சியடைந்த பின்னர், டெலிவரி ஊழியர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

ecommerce delivery in india

உணவு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இணையத்தின் மூலம் ஆர்டர் செய்தாலும், அதனை உரிய இடத்திற்கு கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு சேர்க்க டெலிவரி ஊழியர்கள் அவசியம்.

டெலிவரிக்கு ரோபோக்கள்

இந்நிலையில், டெலிவரி ஊழியர்களை நீக்கி விட்டு, அவர்களுக்கு பதிலாக மனித வடிவ ரோபோக்களை களமிறக்க அமேசான் திட்டமிட்டுள்ளது.

amazon humanoid delivery robot

இந்த மனித வடிவ டெலிவரி ரோபோக்களுக்கான செயற்கை நுண்ணறிவு மென்பொருளை உருவாக்கும் முயற்சியில் அமேசான் நிறுவனம் இறங்கியுள்ளது.

மேலும், மனித வடிவ ரோபோக்களை ரோபோக்களை உருவாக்கி அதற்கு பயிற்சியளிக்க அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அமேசான் அலுவலகத்தில், ஹியூமனாய்டு பார்க் ஒன்றை உருவாக்கியுள்ளது.

amazon humanoid robot park

இங்கு மனித வடிவ ரோபோக்களுக்கு பல்வேறுதடைகளை உருவாக்கி அதன் செயல்திறனை மேம்படுத்த பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.

இந்த பயிற்சியில் ரோபோக்கள் தேறிய பின்னர், வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு டெலிவரி செய்ய அனுப்பப்பட்டு சோதிக்கப்படும்.

amazon humanoid delivery robot

ஏற்கனவே அமேசான் அதன் கிடங்குகளில் ரோபோக்களை பயன்படுத்தி வருகிறது. மேலும், டெலிவரிக்கு ட்ரோன்களை பயன்படுத்தவும் அமேசான் திட்டமிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button