இலங்கை

ஈ.பி.டி.பியிடம் நேரில் சென்று- ஆதரவு கோரிய தமிழரசுக் கட்சி!

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் நேரடியாகச் சென்று இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரவைக் கோரியுள்ளது.

நேரடியாகவே சந்தித்து ஆதரவு கேட்ட தமிழரசுக் கட்சியின் இந்தக் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் யாழ். நகரில் உள்ள ஈ.பி.டி.பியின் தலைமை அலுவலகத்துக்கு  நேரில் சென்று ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

உள்ளூராட்சி சபைகளில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஈ.பி.டி.பி. ஆதரவை வழங்க வேண்டும் என்று அதன் செயலாளர் நாயகத்திடம் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் கோரியுள்ளார்.

இவ்வாறு தமிழரசுக் கட்சியே நேரில் வந்து எம்மைச் சந்தித்துக் கலந்துரையாடி ஆதரவை வழங்குமாறு விடுத்துள்ள கோரிக்கையை ஈ.பி.டி.பி. பரிசீலிப்பதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *