இந்தியா

எனக்கு உறுதுணையாக நின்ற தமிழ் நாட்டிற்கு நன்றி; கர்நாடகாவில் தக் லைப்க்கு தடை; கமல்ஹாசன் நெகிழ்ச்சி!!

சென்னை: எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கு நன்றி என்று நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். உயிரே, உறவே, தமிழே என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்வதாக கூறிய கமல்ஹாசன், தக் லைஃப் திரைப்படம் சர்வதேச தரத்துடன் உருவாகி இருப்பதாக கூறியுள்ளார்.

இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தக் லைஃப். இந்த இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன், தமிழில் இருந்து பிறந்ததே கன்னடம் என்று பேசி இருந்தார்.

கமல்ஹாசனின் இந்த வார்த்தைகள் சர்ச்சையாகியது. இதனால் கர்நாடகாவில் கமல்ஹாசனுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

கர்நாடகா அரசியல் கட்சிகள், அமைப்புகள், கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை, நீதிமன்றம் என்று அனைத்து தரப்பும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றன்ர். இல்லையென்றால் கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் ரிலீஸ் செய்யப்படாது என்று தெரிவித்தனர்

ஆனால் கமல்ஹாசன் பொருளாதார இழப்புக்காக மன்னிப்பு கேட்கவில்லை. அன்பு ஒரு போதும் மன்னிப்பு கேட்காது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால் கர்நாடகாவில் நாளை தக் லைஃப் திரைப்படம் ரிலீஸாகவில்லை. கர்நாடகா தவிர்த்து மற்ற அனைத்து நாடுகளிலும், மாநிலங்களிலும், மொழிகளிலும் தக் லைஃப் நாளை ரிலீஸாக உள்ளது.

கமல்ஹாசன் பேட்டி

இந்த நிலையில் தக் லைஃப் படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கமல்ஹாசன் பேசுகையில்,

அதேபோல் எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கே நன்றி சொல்ல வேண்டும்.. நான் மேடையில் பேசும் போது, உயிரே.. உறவே.. தமிழே.. என்று சொன்ன அர்த்தத்தையும் முழுமையாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் தக் லைஃப் தடை செய்யப்பட்டிருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது, மற்றொரு நாளில் இதனை பற்றி பேசுவேன் என்று கமல்ஹாசன் உறுதி அளித்துள்ளார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *