இந்தியா

மத்திய பிரதேசத்தில் கோர விபத்து: 9 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபுவா மாவட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட வாகன விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் சிலர் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வேனில் வீடு திரும்பி கொண்டிருந்த வேளை கட்டுப்பாட்டை இழந்த லொறியொன்று குறித்த வான் மீது மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நீண்ட நேரம் போராடி வேனில் இருந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதே வேளை விபத்தில் படுகாயமடைந்த இருவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *