முச்சந்தி

பெரும்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் முல்லைத்தீவு மாணவியின் இறுதி ஊர்வலம்

பலநூற்று கணக்கான மக்களின் மத்தியில் முல்லைத்தீவில் ஆலய கேணியில் மூழ்கி உயிரிழந்த மாணவியின் இறுதி ஊர்வலம் இன்றையதினம் இடம்பெற்றிருந்தது.

முல்லைத்தீலு குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணிக்கு 01.06.2025 அன்று மூன்று மாணவிகள் சென்றுள்ளனர். அதில் இருவர் கேணிக்குள் புகைப்படம் எடுப்பதற்காக இறங்கிய வேளை இருவரும் கேணிக்குள் தவறி விழ்ந்துள்ளனர் .

அதனையடுத்து மற்றைய மாணவியின் கதறல் சத்தம் கேட்ட நிலையில் குமுழமுனை இளைஞர்களால் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த சற்சொரூபநாதன் றஸ்மிளா எனும் மாணவியின் இறுதி ஊர்வலம் இன்றையதினம் பெரும்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்று கற்பூரபுல் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இறுதி ஊர்வலத்தில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button